Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கு வறுமை…. விருதுகளை விற்ற நடிகைக்கு சிரஞ்சீவி உதவி…. குவியும் பாராட்டுக்கள்….!!!

ஊரடங்கால் வாங்கிய விருதுகளை விற்க முயன்ற நடிகைக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உதவி செய்துள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சினிமா துறையை சேர்ந்த பலருக்கும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்பிரபலங்கள்  கஷ்டத்தில் உள்ளனர்.

அந்த வகையில் வருமானம் இன்றி இருக்கும் பிரபல தெலுங்கு நடிகையான பாவலா சியாமளா தான் சிறப்பாக நடித்ததற்காக வாங்கிய விருதுகளை விற்று தனது தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள நினைத்துள்ளார். இதனை அறிந்த பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிகை சியாமளாவிற்க்கு 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மேலும் தெலுங்கு திரைப்பட சங்கத்தின் மூலம் அவருக்கு மாதம் 6000 ரூபாய் பென்சன் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். சிரஞ்சீவியின் இச்செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |