Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உடலின் எதிர்ப்பு சக்திக்காக… ஆயுர்வேதத்தில் அதிகரித்த ஆர்வம்… வாங்கி செல்லும் பொதுமக்கள்…!!

பொதுமக்கள் ஆயுர்வேத மருந்துகளை வாங்கிச் செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை எதிர்கொள்வதற்காக சத்தான உணவு, பழங்கள் மற்றும் மாத்திரைகளை சாப்பிட்டு உடலை பலப்படுத்துகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஆயுர்வேத பிரிவில் ஆயுர்வேத மருந்துகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இங்கு அஸ்வகந்தா லேகியம், சுதர்சன் அவடி, தசமூலகடுத்ரய கசாயம், பில்வாதி குடிகா போன்ற ஆயுர்வேத மருந்துகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனை ஆயுர்வேத பிரிவின் டாக்டர் கவிதா பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆயுர்வேத மருந்துகளை வாங்கி செல்லலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |