உச்ச நட்சத்திரங்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று பிரபல இயக்குனர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு உச்சக் நட்சத்திரங்களுக்கு பிரபல இயக்குனர் பேரரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் உச்சத்தில் உள்ள சில நடிகர்களின் சின்ன அசைவு கூட இங்கே பல அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. அவர்களின் ஒரு சொல்லுக்குப் பல பொருள் சொல்லப்படுகிறது. அவர்களின் ஹேர் ஸ்டைல், உடை இவற்றை கூட அவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள்.
இந்த கொரோனா பேரிடர் காலத்தில் உச்ச நடிகர்கள் தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ அல்லது அறிக்கையை வெளியிட்டால் அது நிச்சயம் மக்கள் மத்தியில் போய் சேரும். பலரின் உயிர் காக்கும் செயலாகவும் அமையும். எத்தனை கோடி கொடுத்தாலும் அதை விட இது பயனுள்ளதாக அமையும் என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/ARASUPERARASU/status/1394917973777731584