Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மாடுகள் அங்கே விடப்படும்” உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகள் பஜாரில் சுற்றித்திரிந்த 27 மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் மெயின் பஜாரில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து மாடுகளைத் தொழுவத்தில் கட்டி வைக்குமாறும், மீறி அவை சாலைகளில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை உரிமையாளர்கள் பொருட்படுத்தாமல் இருந்ததால் மாடுகளால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் காவல்துறையினர் பஜாரில் சுற்றித்திரிந்த 27 மாடுகளை பிடித்து விட்டனர். அதன்பின் அந்த மாடுகளை சமுதாய நலக்கூடம் அருகே இருக்கும் காம்பவுண்டுக்குள் அடைத்து விட்டனர். இதனையடுத்து தங்களது மாடுகள் பஜார் பகுதிக்குள் வராமல் பார்த்துக் கொள்வோம் என எழுதிக் கொடுத்து, அபராதத்தை செலுத்திய பிறகு மாடுகளை வீட்டிற்கு ஓட்டி செல்லலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மாடுகளை திருச்செந்தூரில் இருக்கும் கோசாலையில் அடைத்து விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |