Categories
மாநில செய்திகள்

“கியூலக்ஸ் கொசுவின் மூளை காய்ச்சல்” 6 மணி முதல் 8 மணி வரை ஜாக்கிரதை..!!

அனைவரையும் அச்சுறுத்தும் மூளை காய்ச்சலின் அறிகுறி மற்றும் அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் நோய் தடுப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தமிழகத்தில் வர விடாமல் தடுக்க அதிவேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1871 ஆம் ஆண்டு ஜப்பானில் பெரும்பாலான சிறுவர்களை தாக்கிய இந்த வகை காய்ச்சலுக்கு 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மழை பொழிந்து தேங்கி இருக்கும் நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிப்பதால் உருவாகும் கொடிய நோய் தான் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்.

Image result for kiulex mosquito

வெளிநாட்டு பறவைகள் மற்றும் மாடுகளை கடிக்கும் இந்த கொசுவுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்றும், அவை ஒரு மனிதனைக் கடித்தால் அவருக்கு ஜப்பானிய மூளை காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், மதுரை, விருதுநகர், கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் இருந்து 22,500 கியூலக்ஸ் கொசுக்களை பிடித்து பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

Image result for கொசுக்கள்

இதில் 5 கொசுக்களில் ஜப்பானிய மூளைக் காய்ச்சலை பரப்பும் ரத்த மாதிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை மட்டுமல்லாமல், அனைத்து வகை கொசுக்களில் இருந்து மனித உடலில் இருந்து இரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்கள் மட்டுமே என்றும் மனித ரத்தத்தில் மட்டுமே கொசுக்களின் கருமுட்டையை வளர்க்க உதவும் புரதச் சத்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை வரையில் மட்டுமே மனிதர்களை கடிக்கும் தன்மை உடையவை.

Image result for மாலை நேர கொசு

நோய் எதிர்ப்பு சக்தி குறைவான 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இந்த கொசுக்கள் கடித்தால் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் எளிதில் தாக்கும் என்று எச்சரிக்கின்றனர். ஒருவரை ஜப்பானிய மூளை காய்ச்சல் தாக்கினால் உடலில் ஆரம்ப கட்டத்திலேயே நுட்பத்திலிருந்து 120 டிகிரி வரை உச்சபட்ச காய்ச்சல் இருக்கும் அவர்கள் கண்கள் சிகப்பாக மாறும் கழுத்து நிலையாக நில்லாமல் நடுங்கிக்கொண்டே இருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக நினைவாற்றல் மங்கி சுயநினைவை இழக்க வைக்கும். தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருந்தால் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Image result for brain fever

ஒரு வாரம் வரை மனிதனை பாடாய் படுத்தும் இந்த வகை காய்ச்சல் வந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை மேற்கொண்டு தேவையான சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் தேவையான மருந்து மற்றும் மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயாராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஜப்பானிய மூளைக் காய்ச்சலை பரப்பும் கொசுக்களை எளிமையாக கட்டுப்படுத்த அரசின் பொது சுகாதாரத் துறையின் கீழ் உள்ள பூச்சியல் ஆய்வுக்கூடத்தில் தினமும் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Categories

Tech |