புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி வெள்ளாற்று பாலம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டியை தடுத்தி நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த காவல் துறையினர் உரிமையாளரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.