தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் அன்புடன் டிடி, ஜோடி no.1 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ப.பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தொகுப்பாளினி டிடி-யிடம் குக் வித் கோமாளி சீசன் 3-யில் போட்டியாளராக வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு டிடி ‘எனக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் பங்கேற்பேன்’ என பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.