Categories
தேசிய செய்திகள்

Breaking: முன்னாள் முதல்வர் காலமானார்…. பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா (89) கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 1980 இல் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரான இவர், ஹரியானா மற்றும் பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |