புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நசரேத் பேருந்து நிறுத்தம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்த போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கலிங்க மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், நல்லுராஜ், அமல்ராஜ், சுரேஷ், பன்னீர் செல்வம், சக்திவேல், மணிமாறன் ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.