தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் என அனைவருமே தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பில்ரோத் மருத்துவமனை முதன்மை செயல் அலுவலர் டாக்டர் கல்பனா ராஜேஷ் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் காசோலையை சென்னை தலைமை செயலகத்தில் மு.க ஸ்டாலினை சந்தித்து வழங்கியுள்ளார்.