அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் குஜராத்தில் புயலால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மின்சார சேவையும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று புயலால் பாதித்த இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி,நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளார்.