செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி இருப்பதால் குரங்குகள் வீட்டு வாசலிலும் தெருக்களிலும் சுற்றித்திரிகின்றது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து கொத்திமங்களம் பகுதியில் ஏராளமான குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் உணவு மற்றும் நீர் தேடி தெருக்களில் புகுந்துள்ளன. மேலும் சில குரங்குகள் அங்குள்ள வீடுகளில் அமைதியாக அமர்ந்திருந்தது.