தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கூடுதலாக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் மஹாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ ஆக்சிஜனை அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.