இனிப்பு வாழைப்பழ அப்பம்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 1/2 கப்
வாழைப்பழம் – 4
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
சோடா மாவு – 1 சிட்டிகை
முந்திரி – தேவையன அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, சர்க்கரை, வாழைப்பழம் , முந்திரி, ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவு போல் கரைத்துக் கொள்ள வேண்டும்.பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கரண்டியில் மாவை ஊற்றி உருண்டைகளாக பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு வாழைப்பழ அப்பம் ரெடி!!!