நடிகை நயன்தாராவின் மேல் எழுந்த தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்போது தடுப்பூசி மட்டுமே தீர்வாக இருக்கிறது. ஆகையால் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவும், அவரது காதலனும், பிரபல தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவனும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இதுகுறித்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதில் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் பலர் அந்த நர்ஸ் கையில் ஊசியே இல்லை என்றும், நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி செலுத்தி கொண்டாரா அல்லது அப்படி போஸ் மட்டும் கொடுத்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் நயன்தாராவிற்கு தடுப்பூசி செலுத்தும் நர்ஸ் கையில் உண்மையிலேயே ஊசி இருக்கிறது. ஆகையால், நயன்தாரா தடுப்பூசி செலுத்தி கொண்டது உறுதியாகியுள்ளது.