Categories
மாநில செய்திகள்

தமிழகம் முன்மாதிரியாக மாற்றப்படும்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் ஆக்சிஜனை விரைவில் இறக்குமதி செய்யவும், படுக்கைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சேலம், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இத்தகைய கள ஆய்வின் மூலமாக அரசு மருத்துவமனைகளின் வசதிகளை நேரடியாக அறிந்து கொள்ளவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவைகளையும் கேட்டறியவும் முடிகிறது.தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு முன்மாதிரியானதாக மாற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |