கொரோனா நிவாரண நிதிக்காக கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து நிதி திரட்டி உள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீராங்கனையின் தாயாரின் மேல் சிகிச்சைக்காக இந்திய கேப்டன் விராட் கோலி நிதியுதவி அளித்துள்ளார் .இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரவந்தி நாயுடுவின் தாயார், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாயின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 16 லட்சம் செலவு செய்திருந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ரூபாய் 6.7 7 லட்சம் தேவைப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக நிதி உதவி கேட்டு பிசிசிஐ மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திடம் ஸ்ரவந்தி நாயுடு உதவி கேட்டுள்ளார்.ஆனால் இது தொடர்பான எந்த ஒரு பதிலும், அவருக்கு அளிக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் , தன்னுடைய இன்ஸ்டாகிராம்பதிவில், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை டேக் செய்து உதவி கேட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த விராட் கோலி உடனடியாக ,ஸ்ரவந்தி நாயுடு தாயாரின் மேல் சிகிச்சைக்காக ரூபாய் 6.77 லட்சத்தை கொடுத்துள்ளார். முன்னாள் வீராங்கனைக்கு கேப்டன் விராட் கோலி செய்த உதவி ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாகவே விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதிக்காக ,7 நாட்களில் ஒரு ரூபாய் 11 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர் .அத்துடன் இருவரும் தனிப்பட்ட முறையிலும் நிதி உதவி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.