உத்தரபிரதேச மாநிலத்தில் தனது வருங்கால மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது சில இளைஞர்கள் சேர்ந்து அவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பைக்கை வழிமறித்த சில இளைஞர்கள் வருங்கால கணவரை அடித்துவிட்டு இளம்பெண்ணை கடத்திக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அந்த இளைஞன் தன்னுடைய குடும்பத்திற்குப் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் காவல்துறையினருக்கு விரைந்து தகவல் அறிவிக்கவே அங்கு சென்ற காவல்துறையினர் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய மூன்று இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் அவர் காட்டுப்பகுதியில் மரம் வெட்ட செல்பவர்கள் என்பது தெரியவந்தது.