Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரை பேருந்தில் ஏற்றாத நடத்துனர் தாக்குதல் “விசாரணை நடத்திய காவலருக்கும் அடி” இருவர் கைது..!!

திருத்தணியில் நண்பரை பேருந்தில் ஏற்றாததால் நடத்துனர் மற்றும் காவலரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர், தனது நண்பர் விஜய்யை ரேணிகுண்டாவிற்கு வழியனுப்ப ஆந்திரா அரசு பேருந்தில் ஏற்றி விடுவதற்கு  பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்தில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததால் விஜய்யை ஏற வேண்டாம் என்று  நடத்துனர் கூறியதால்  சக்கரவர்த்தி ஆத்திரமடைந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Image result for தாக்குதல்

இதனை கண்டு அங்கிருந்த போக்குவரத்து காவலரான ராமன் என்பவர் வந்து விசாரணை செய்தார். அப்போது அவரையும் காவலர் என்று பாராமல் சக்கரவர்த்தி மற்றும் விஜய் ஆகிய இருவரும்  சேர்ந்து அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

Related image

இதையடுத்து தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சக்கரவர்த்தி என்பவன் மீது ஏற்கனவே திருத்தணி காவல் நிலையத்தில் இரண்டு  அடி தடி வழக்குகள்  நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது பேருந்து நடத்துனர் மற்றும் காவலரை தாக்கியதாக மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |