ஒரு கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற பெற்றோர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தை இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர். குழந்தை பெற்றெடுக்கும் பலர் குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசுவது, காசுக்காக விற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி ஒருவர் பிறந்த குழந்தையை கார் வாங்குவதற்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் வழி தாத்தா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பிறந்த மகனை ஒரு தொழிலதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது பெற்றோர்களிடம் விசாரணை நடத்தியபோது நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்காக குழந்தையை விற்றதாக தெரிவித்தனர். பெற்றோர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் அந்த குழந்தை தொழிலதிபரிடம் தான் உள்ளது.