Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் காலை 6 – இரவு 10 மணி வரை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதி.

இந்நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இ-பதிவு குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 என்ற எண்ணிற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |