நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
https://twitter.com/NayantharaU/status/1395081090361028612
மேலும் கடந்த வருடம் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சித் ஸ்ரீராம் பிறந்தநாளை முன்னிட்டு நெற்றிக்கண் படத்தின் முதல் பாடல் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் கடந்து போகும் எனத் தொடங்கும் இந்த பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.