Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அர்ஜுன் தாஸின் புதிய ஆல்பம் பாடல் ரிலீஸ்… இணையத்தில் செம வைரல்…!!!

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள போட்டும் போகட்டுமே ஆல்பம் பாடல் ரிலீஸாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இதை தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அர்ஜுன் தாஸ், லாவண்யா திரிபாதி நடிப்பில் உருவாகியுள்ள போட்டும் போகட்டுமே என்ற ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. சத்யஜித் ரவி மற்றும் ஜென்மார்டின் இணைந்து இசையமைத்துள்ள இந்த பாடலை லோகின் மெட்ராஸ் விக்னேஷ் இயக்கியுள்ளார். காதல் மற்றும் அதிரடி ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |