ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கடந்த 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தை டி ஆர் பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ளதாக திமுக கூறியுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் 7 பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் கொரோனா பாதிப்பு காரணமாக ஜெயில் கைதிகளை விடுதலை செய்ய கூறி இருக்கிறது என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்.