சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 6,716 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையம் அமைத்து காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்ததாக மொத்தம் 6,716 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.