Categories
உலக செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த இயக்குனர் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெற்றோர்.. கொடூர சம்பவம்..!!

ஈரானில் திரைப்பட இயக்குனரை அவரின் பெற்றோரே கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரானில் உள்ள தெஹ்ரான் நகரில் வசிக்கும் பாபக் ஹரோம்தின். இயக்குனரான இவர்  இங்கிலாந்தில் தங்கியிருந்து குறும்படங்களையும், திரைப்படங்களையும் இயக்கி வந்துள்ளார். 47 வயதாகியும் திருமணமாகததால், ஈரானில் இருக்கும் அவரின் பெற்றோர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் திருமணம் செய்ய அவரை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர் சில வருடங்களுக்கு முன் சொந்த நாடு திரும்பி, தன் பெற்றோருடன் வசித்துக்கொண்டே தன் பணியை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது, கடந்த வாரத்தில் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரின் தந்தை அவரை கட்டாயப்படுத்த, அவர் மறுத்ததால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவரின் தந்தை, தன் மகன் உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்ததால் அவர் மயக்கமடைந்திருக்கிறார்.

எனினும் விடாமல் அவரின் தந்தை ஹரோம்தினை, கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அதன்பின்பு அவரின் உடலை துண்டுகளாக வெட்டி சூட்கேசிலும் பைகளிலும் போட்டு அருகில் இருக்கும் பகுதியில் வீசியிருக்கிறார். இதற்கு ஹரோம்தினின் தாயும் துணை போயிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பகுதி மக்கள், மனித உடலின் பாகங்கள் துண்டுகளாக சூட்கேஸில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் அந்த பாகங்கள் ஹரோம்தினுடையது என்று உறுதிப்படுத்தினர். அதன் பின்பு அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்கள் மகனை கொன்றதை அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |