நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கன்னட திரையுலகில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார்.
Waiting for dearest Corona to leave like. 🤷🏻♀️😒 #ThrowbackThursday pic.twitter.com/XTOavaPtMZ
— Rashmika Mandanna (@iamRashmika) May 20, 2021
தற்போது இவர் சில தெலுங்கு படங்களிலும் இரண்டு பாலிவுட் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு ‘கொரோனா எப்போது போகும் என காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார் . கன்னத்தில் கை வைத்து கியூட்டாக ராஷ்மிகா போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.