இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது.
இந்நிலையில் யூடியூப் சேனல் தொடங்கினால் ஓய்பிபி அங்கீகாரம் பெற்றால் மட்டுமே விளம்பரங்கள் மூலம் வருவாய் பெற முடியும். ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள கொள்கையின் அடிப்படையில் புதிதாக சேனல் தொடங்கும் நபருக்கும் விளம்பரங்கள் வழங்கப்படும். ஆனால் அதன் மூலம் வரும் வருவாயை ஒய்பிபி அங்கீகாரம் பெறாத சேனல் பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.