குஜராத் பகுதியில் டவ்-தே புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக அறிவித்துள்ளார்.
அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இது கடலோரப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 16 ஆயிரம் வீடுகள், 40 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. 70 ஆயிரம் மின்கம்பிகள் சாய்ந்தது. இதன் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு வேலை செய்ய முடிகிறது 5,959 கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. இந்த புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
நேற்று நண்பகல் அவர் தனி விமானத்தில் புறப்பட்டு சென்று குஜராத்தின் பாவ் நகரில் தரை இறங்கினார். அவரை முதல்-மந்திரி விஜய் ரூபானி வரவேற்றார். பிறகு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புயல் பாதித்த பல இடங்களை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு உடனடி நிவாரண நிதியாக மத்திய அரசு சார்பில் ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் இழப்பீடாக அறிவித்துள்ளார்.