பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் ,வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது .
இந்தியாவில் நடத்தப்படும் ஐபில் தொடரை போலவே பாகிஸ்தானிலும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது. இந்த வருடமும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி , கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் அபுதாபியில் போட்டியை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு விருப்பம் தெரிவித்தது. எனவே அபுதாபியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு போட்டியை, நடத்துவதற்கு தயாராகி வருகின்றன. அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.