மதுரையில் 500 படுக்கை வசதிகளை கொண்ட புதிய மருத்துவ மனையில் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இவற்றை சரி செய்வதற்கு மருத்துவமனை அல்லாத பல பகுதிகளில் படுக்கை வசதி உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதேபோல் தற்போது மதுரையில் உள்ள தோப்பூர் நெஞ்சக மருத்துவமனையில் 500 ஆக்சிடென்ட் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் இருக்கும் பகுதி கட்டப்பட்டு வருகின்றது. கொரோனா சேவைக்கு என்று பிரத்தியேகமாக தயார் செய்யப்படும் இந்த பிரிவை, நாளை தமிழக முதல்வர் வந்து திறந்து வைக்க உள்ளார். அதை இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர்.