Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின் கட்டணம்… அரசு புதிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கிட்டு இணையவழியில் செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சுயமதிப்பீடு செய்து செலுத்தலாம் என தமிழக அரசின் மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை மக்கள் சுயமதிப்பீடு செய்து அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் வழியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். தங்கள் மின் கட்டணத்தை இணையவழியில் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சுயமதிப்பீடு மின் கட்டணத்தில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் மின் வாரியத்தால் மீண்டும் கணக்கீடு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |