இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
‘பறக்கும் சீக்கியர்’ என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் ,முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவர் காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றவர் .அத்துடன் கடந்த 1960 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மயிரிழையில்,வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார். 91 வயதான மில்கா சிங் தனது குடும்பத்தினருடன் சண்டிகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மில்கா சிங் கூறும்போது, எங்களுடைய வீட்டில் உதவியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், நானும் என்னுடைய குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம் .
பரிசோதனையில் எனக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதியானது . எனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது, சற்று ஆச்சரியத்தை தந்தது. ஏனெனில் நான் சளி ,காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். இதனால் 3-4 நாட்களில் விரைவில் குணம் அடைந்து விடுவேன் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்று கூட ஓட்டப் பயிற்சியை மேற்கொண்டு நல்ல உத்வேகத்துடன் இருக்கிறேன். நாட்டுமக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு அனைவரும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறினார். மில்கா சிங்கின் மகனும் ,கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் நாளை நாடு திரும்புவதாக தெரிவித்துள்ளார்.