நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. இதன் காரணமாக கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாதத்துக்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அதன்படி ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரையிலான ரூ.300 தரிசன டிக்கெட்டை இன்று காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். கொரோனா பரவல் காரணமாக ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கட் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.