தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு படிப்படியாக குறித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க சட்டப்பேரவை அனைத்துக்கட்சி எம்எல்ஏக்களுடனும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், முழு ஊரடங்கை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.