மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகன தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகேந்திரா, ashok leyland, மாருதி சுசுகி, போன்ற பெரிய நிறுவனங்கள் மாதத்திற்கு 8 முதல் 10 நாட்கள் வரை தொழிற்சாலையை இயக்க வேண்டாமென முடிவெடுத்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றனர். வாங்குவதற்கான கேட்பு குறைந்து விட்டதே இதற்கு காரணம் என்றும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தொழிற்சங்க தலைமை நிர்வாகி ஒருவர் இது குறித்து கூறுகையில், நாடு முழுவதும் மோட்டார் வாகன உற்பத்தி தொழிலில் லாரி, கார், மோட்டார் பைக், 3 வீலர் போன்ற அனைத்து வாகன உற்பத்தியும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. இதனால் 13 சதவீதத்திலிருந்து 24 சதவீதம் வரை உற்பத்தி குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சில கம்பெனிகள் மூடப்பட்ட்டுள்ளதாக தெரிவித்த அவர், மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு முடிவு காண முன்வர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.