நாடு முழுவதும் கொரோனாவால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில்,பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் அதிகரித்து உள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.94.72-க்கும், ஒரு லிட்டர் டீசல் 28 காசுகள் அதிகரித்து ரூ.88.62 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories