தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் என அனைவருமே தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கோவைக்கு ஆய்வுக்காக சென்ற முதலமைச்சரிடம் கோவையை சேர்ந்த தொழில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரூ.32 கோடிக்கான காசோலை கொடுக்கப்பட்டுள்ளது.