Categories
தேசிய செய்திகள்

Breaking: நீட்டிப்பு….. அரசு, தனியார் ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கபடுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கை தேவைப்படாத தனிநபர்கள் மற்றும் ஊழியர்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |