Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பகுதியில் மருந்து விற்பனை செய்யும் பஷீர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஹசினா பானு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 14ஆம் தேதியன்று இருவரும் நெல்லை பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டு இருக்குபோது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் பின்னால்  அமர்ந்திருந்த ஹசினா பானு கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

அதன்பின் ஹசீனா பானுவை அவரது கணவர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ஹசீனா பானுவிற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஹசினா பானுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |