பிரபல நடிகர் ஒருவர் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் எஞ்சியிருக்கும் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க பட இருப்பதால் அதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. வலிமை படத்தின் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பலரும் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இன்றுவரை படக்குழுவினர் வலிமை படத்தின் போஸ்டரை வெளியிடாமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றம் அளித்துள்ளது. இருப்பினும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷ் வலிமை திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை கூறியுள்ளார்.
அதில், வலிமை திரைப்படம் அஜித் சார் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனென்றால் இத்திரைப்படத்தில் அவர் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இத்தகவல் ரசிகர்களிடம் இப்படத்திற்கான ஆவலை அதிகரித்துள்ளது.