ரோஜா சீரியல் நாயகன் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்றை தெரிவித்தனர்.
பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் டிஆர்பியிலும் முன்னணியில் இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஜாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இதில் நாயகனாக நடித்து வரும் சிப்புவின் கதாபாத்திரம் கடந்த சில நாட்களாக வரவில்லை.
ரசிகர்கள் பலரும் சிப்புவை மிஸ் செய்வதாக சமூக வலைத்தள பக்கத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இதனை அறிந்த சிப்பு ரசிகர்களுக்கு பதில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில நாட்களாக நீங்கள் என்னை திரையில் மிஸ் செய்தீர்கள். ஆனால் அடுத்த வாரத்திலிருந்து சூப்பரான நீதிமன்ற காட்சியுடன் நான் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இது ரசிகர்களிடம் அடுத்த வார எபிசோடை காணும் ஆவலை அதிகரித்துள்ளது.