தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவ நிபுணர் குழு உடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கு திங்கட்கிழமை உடன் முடிவடையும் நிலையில், மருத்துவக் குழுவுடன் ஆலோசனைக்கு பிறகு முழு ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.