விருதுநகர் மாவட்டம் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள தெற்கு தேவதானம் மேற்கு வீதியில் கார்மேகம்(35) மற்றும் அவரது மனைவி ரோஸ்லின்(33) வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கிடையில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து ரோஸ்லின் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.