கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த எண்ணற்ற கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இருமடங்காக அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கடை உரிமையாளர்கள் மீது அதிக அளவு அபராதம் விதிப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.