10,000 விவசாயிகளுக்கு 2 வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்திய முதல்வர் குறைதீர்க்கும் திட்டம் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் அதிகாரிகளிடம் குறையாக அளிக்கும் மனுவை நேரடியாக முதல்வரே பெற்று அதனை பரிசீலித்து உடனடியாக தீர்வு காண முடியும். இந்த திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தத நிலையில்,
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக முதல்வர் மற்றொரு திட்டத்தை வெளியிட இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் விரிவாக கூறுகையில்,10 ஆயிரம் விவசாயிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.