Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் போட்டியில்…. இந்திய மகளிர் அணி விளையாடுகிறது …!!!

இந்திய மகளிர் கிரிக்கெட்  அணி முதல்முறையாக ,பகல் – இரவு  டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் தொடர் மற்றும் மூன்று  டி20 போட்டிகளில்  விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் போட்டி,  ஜூன் 16 ஆம் தேதி பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2014 ம்  ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில்,  இந்திய மகளிர் அணி விளையாடுகிறது. இதன்பிறகு ஆஸ்திரேலியாவிற்கு சென்று, இந்திய மகளிர்  அணி விளையாட இருக்கும் போட்டிக்கான  அட்டவணையை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 19, 22 ,24 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இதன்பிறகு இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30 ம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடக்கும் ,இந்த போட்டியானது பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படுகிறது. எனவே இந்த போட்டியில் மூலம் முதல் முறையாக இந்திய மகளிர் அணி பகல் -இரவு டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது  இதற்கு முன்பாக பெண்கள் கிரிக்கெட் வரலாற்றிலேயே இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ,ஒரே ஒரு பகல் – இரவு டெஸ்ட் போட்டி நடந்துள்ளது. சிட்னியில் கடந்த 2017 ஆம் ஆண்டு  நடந்த அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மகளிர் அணி இதுவரை ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது இல்லை.

ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக 9 போட்டிகளில்  விளையாடிய இந்திய அணி 5 போட்டியில் டிராவும், 4 போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை, நாங்கள் முன்னெடுத்து  செல்கிறோம்’. இந்திய மகளிர் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் முதல்முறையாக பகல்- இரவு டெஸ்ட் போட்டி விளையாட இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்.இந்த டெஸ்ட் போட்டி முடிந்ததும் , இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக  3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுகிறது . இந்த போட்டிகள் அக்டோபர் 7, 9, 11 ஆகிய தேதிகளில்  நார்த் சிட்னி ஓவல் ஸ்டேடியத்தில் நடக்கிறது .

Categories

Tech |