Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு?…. புதிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மே 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 10 நாட்களில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |