Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவில் உலகக் கோப்பை டி20 போட்டி…! விளையாடுவது கடினம்தான்- மைக் ஹஸ்சி…!!!

இந்தியாவில் உலகக் கோப்பை டி20 போட்டி விளையாடுவது ,கடினம்தான்  என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , சிஎஸ்கே அணியின் பேட்டிங்  பயிற்சியாளருமான  மைக் ஹஸ்சி ,சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மைக் ஹஸ்சி, சிகிச்சையிலிருந்து குணமடைந்து ,சில தினங்களுக்கு முன் சொந்த நாட்டிற்கு சென்றடைந்தார். இந்நிலையில் நேற்று பேட்டி ஒன்றில்  கூறும்போது, இந்த ஆண்டுஅக்டோபர், நவம்பர் மாதங்களில் உலக கோப்பை டி20 போட்டி இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் நிலவி வரும்  கொரோனா தொற்று பரவலால் ,  உலக கோப்பை டி20 போட்டி இந்தியாவில் நடத்துவது கடினம்தான் என்று கூறினார் .

ஏனெனில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையத்தை மீறி , வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் உலகக் கோப்பை போட்டியின் போது அதிக அணிகள்  பங்கேற்க உள்ளன. அத்துடன் அதிக மைதானங்களிலும் போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. இதனால்  ஐக்கிய அரபு அமீரகம் அல்லது வேறு நாடுகளில் போட்டி நடத்துவது பற்றி, ஆலோசனை நடந்தி  வந்தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் ,இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான, பெரிய அளவில் முயற்சி எடுக்கும் என்று நினைக்கிறேன்.  எனவே இந்த உலகக் கோப்பை டி 20 போட்டி ,இந்தியாவில் விளையாடுவது கடினமாக இருக்கும் என்று, அவர் கூறினார் .

Categories

Tech |