காசு வைத்து சூதாடி கொண்டிருந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலூர் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் அப்பகுதியில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த அலெக்சாண்டர், அண்ணாமலை, கணேசன், சொக்கணாண்டி, சேதுபதி ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கண்டுள்ளனர், இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 11500 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.